×

காரைக்கால் பகுதிகளில் மழை பாதிப்புகளை கலெக்டர் ஆய்வு

 

காரைக்கால்,ஜன.9: காரைக்கால் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வ.உ.சி. புறவழிச்சாலையில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கம் அருகில் இருக்கும் மாஸ் நகரில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மழையால் பாதிக்கபட்ட பகுதிகளை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், பொது மக்களுக்கு எவ்வித சிறமமும் இல்லாமல் விரைந்து பணிகளை முடிக்கும் படியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் எதிர்வரும் மழை காலங்களில் இது போல் தண்ணீர் தேங்காமல் இருக்க நிறந்தர நடவடிக்கை எடுக்கும் படியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இவ்விடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமப்பட்டு இருப்பதை உடனடியாக சரி செய்து மழைநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து திருநகர் பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் குலோத்துங்கன் காமராஜர் வீதியை கடக்கும் வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை நீக்கி உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அரசலாறு அருகிலுள்ள நெல்லி வாய்க்காலின் சேதம் அடைந்த இடதுபுற கரையை செப்பணிட்ட பணியையும் கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நிர்வாக பொறியாளர் மகேஷ், நகராட்சி ஆணையர் சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post காரைக்கால் பகுதிகளில் மழை பாதிப்புகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,V.U.C. ,Karaikal District ,Mass Nagar ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...